யாழில் நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் !

நபர் ஒருவரை வாளால் வெட்டிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்று (07) இரவு 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 நபர்களால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த தவபாலன் டிலக்சன் என்பவர் படுகாயமடைந்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமதுபான விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சி
Next articleநாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை !