இலங்கையில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு ! பொதுமக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் !

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை மீள அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (09-01-2023) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரின் எதிர்ப்பின் பின்னணியிலேயே இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Previous articleமுன்னாள் ஜனாதிபதி இல்லத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி!
Next articleமட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!