கண்டி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு !

கண்டி மஹியங்கனை 18 வளைவு வீதியில் 14ஆம் மற்றும் 15ஆம் வளைவுகளுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் தற்போது ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleஎதேச்சையாக தன் ஜாதி பெயரை கூறிய த்ரிஷா! சர்ச்சையாக்கும் நெட்டிசன்கள் !
Next articleவிஷப்பூச்சி கடித்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை!