இலங்கையில் ஆரம்பிக்கப்பட வேண்டிய இலகு தொடருந்து சேவை பங்களாதேஷில் ஆரம்பம்

இலங்கையில் தொடங்கப்படவுள்ள இலகுரக ரயில் சேவை, நாட்டின் முதலாவது மெட்ரோ ரயில் சேவையாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவினால் டாக்காவில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டு முடிவடையத் திட்டமிடப்பட்டது.எனினும் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இந்தத் திட்டத்தை ரத்து செய்தார்.

இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நீர்கொழும்பு, கண்டி, கடுவெல, மாலபே, கொட்டாவ, பிலியந்தலை, மொரட்டுவ ஆகிய ஏழு வழித்தடங்களில் 16 நிலையங்கள் ஊடாக நகர இலகு ரயில் சேவைகளை ஆரம்பித்திருக்க முடியும்.

இதனால் போக்குவரத்து பிரச்னைக்கு பெரிய அளவில் தீர்வு கிடைக்கும். எனினும் இதனை ராஜபக்சக்கள் ரத்து செய்தனர்.

பங்களாதேஷிற்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் இலங்கையில் மாலபே எல்ஆர்டி திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் அதே முகவரான ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் பிரதிநிதியும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

இந்த திட்டத்திற்கு பெரும்பாலும் ஜப்பான் நிதியளித்தது. பங்களாதேஷ் பிரதமர் இது பங்களாதேஷின் வளர்ச்சி மற்றும் வங்காளதேச மக்களுக்கான ஒரு படி என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் டாக்காவின் பாரிய போக்குவரத்துப் பிரச்சினை தீரும் என நம்பப்படுகிறது.