குருநாகல் – பொத்துஹெரவில் போலியாக நிர்மாணிக்கப்பட்ட தலதா மாளிகை இடிப்பு!

குருநாகல் – பொதுஹெரவில் அமைக்கப்பட்டிருந்த போலி தலதா மாளிகை தற்போது இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா வீடொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் பௌத்த தேரர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களை ஏமாற்றி பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக் கொண்ட ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான ‘தலதா மாளிகை’ கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தலதா வீடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செப்பல் அமரசிங்க என்ற மற்றுமொருவர் வெளியிட்ட கருத்து பௌத்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து ஜனக சேனாதிபதி மற்றும் சேபால அமரசிங்க ஆகியோருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு செபல் அமரசிங்கவை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் போலி தலதா மாளிகையும் இடிக்கப்பட்டது.