இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பெரும் மோதல்! ஒருவர் உயிரிழப்பு

களனி – பெத்தியகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நேற்று (07-01-2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

களனி பெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் தாக்கப்பட்டமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தகராறிற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகுருநாகல் – பொத்துஹெரவில் போலியாக நிர்மாணிக்கப்பட்ட தலதா மாளிகை இடிப்பு!
Next articleகொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ரணில் தீர்மானம்!