கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ரணில் தீர்மானம்!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பயன்படுத்த தீர்மானித்ததன் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிறுவவும், தற்போது கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.