500 பேருந்துகளை இலங்கைக்கு வழங்கும் பிரபல நாடு!

இந்திய அரசு இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கியுள்ளது.

இந்த பஸ்களை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளித்தார்.

இவை இலங்கை போக்குவரத்து சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக 75 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Previous articleசூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா
Next articleநாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை! ஏற்படபோகும் ஆபத்து