அரசு நிகழ்ச்சியில் கால்சட்டையுடன் சிறுநீர் கழித்த நாட்டின் அதிபர் – வெளியானது காணொளி

தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் மேயர்டிட் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கால்சட்டையில் சிறுநீர் கழிக்கும் வீடியோவை வெளியிட்ட குற்றச்சாட்டில் 6 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட ஆபிரிக்க நாடான தென் சூடானின் அதிபர் சல்வா கீர் மேயர்டிட் (71) அரசு விழா ஒன்றில் தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பு விழாவின் போது, நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, ஜனாதிபதி சல்வா கீர் மேயர்டிட் தனது கால்சட்டையில் சிறுநீர் கழிப்பது கேமராவில் சிக்கியது.

2011 ஜூலையில் தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்ததில் இருந்து சல்வா கீர் மேயர்டிட் அதிபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படாவிட்டாலும், அது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 3-ம் தேதி, சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பத்திரிகையாளர்களை ரகசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதேவேளை, ஊடகவியலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) கோரிக்கை விடுத்துள்ளது.

Previous articleஅகில இலங்கை தாதியர் சங்கம் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது
Next articleதாயாரை பழிவாங்க சிறுமியின் தலைமுடியை வெட்டிய தம்பதி