இலங்கை பெண் ஜனனிக்கு அடித்த பேரதிஷ்டம் !

94 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 மிகவும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான ஜனனி முக்கிய போட்டியாளராக இருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

மேலும் தொடக்கத்தில் அவரது செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பலரும் ஜனனியை ஆதரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் கடைசியில் அமுதவாணனுடன் பார்ட்னர்ஷிப்பில் விளையாடுவதும், எப்போதும் அவருடன் சுற்றித் திரிவதும் சலித்துப் போனது. இதனால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த அவர் தற்போது பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு ஜனனிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleசகுந்தலம் பட நிகழ்ச்சி விழாவில் அனைவரின் முன்பும் கண்ணீர்விட்டு அழுத நடிகை சமந்தா- என்ன ஆனது !
Next articleபிக்பாஸில் நடந்தது என்ன! தீயாய் பரவும் விக்ரமன் – மைனா நந்தினி வீடியோ