மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் மகிந்த விடுத்த கோரிக்கை !

மின் கட்டண அதிகரிப்பை மீளாய்வு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, மின் கட்டணத்திற்கான செலவுச் சீர்திருத்தங்களுடன் கூடிய விலைச்சூத்திரத்தைத் தயாரிக்கும் யோசனைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர் இது தொடர்பான மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில், மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleஅமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக ! இந்திய பெண் மன்பிரீத் பதவியேற்பு !
Next articleவிபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில இருக்கும் நடிகை ஆல்யா மானசா!