கிளிநொச்சியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலி !

அண்ணன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

சகோதரர்களுக்கு இடையே தொலைபேசியில் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணன் கத்தியால் தம்பியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய தருமராசா தவசீலன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் முஜிபுர் ரஹ்மான் !
Next articleஉத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது ! இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்து !