ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

செலவுக் கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அமைச்சுக்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில் ஐந்து வீதத்தினால் செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளினால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ” பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.