ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக இன்று (10) ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மாவட்ட தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைச் சின்னத்தில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்கள் எவை மொட்டு சின்னத்தில் போட்டியிடலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதன்படி, கொழும்பு மற்றும் கண்டி மாநகர சபைகளிலும் புத்தளம் நகர சபையிலும் யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
Next articleமின்கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம்