யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் மீது பிரித்தானியாவில் கொலை முயற்சி

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், மனைவி மற்றும் குழந்தைகளை அறையில் பூட்டி வைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனைவி மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கணவரை கைது செய்தனர்.

இதேவேளை, கடையொன்றில் பணிபுரியும் கணவர் எதற்காக கொலை செய்ய முயன்றார் என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணையில் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleதமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய ஐஸ் போதை பொருள் பறிமுதல்
Next articleவவுனியாவில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட்