வவுனியாவில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று (10) காலை 6.30 மணியளவில் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் வளைவுக்கு அருகில் 500 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் வசந்த சந்தன நாயக்கரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்