கனடாவில் இருந்து தனது மகளின் சடங்கிற்காக யாழ் வந்த தாயும் மகளும் தலைமறைவு! வெளியான காரணம்!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தனது மகளின் சடங்கினை சிறப்பாக நடத்துவதற்காக வந்த குடும்பப் பெண் ஒருவர்  தனது  மகளுடன்  தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கணவருடன் ஏற்பட்ட சண்டையில் பெண் மகளுடன் காணாமல் போனது தெரிந்ததே.

இந்நிலையில், மனைவி மற்றும் மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு மனைவி தன்னுடன் தகராறு செய்து மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன்பிறகு தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் கணவருடன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டு, தான் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும், தன்னை தேடாமல் இருக்குமாறும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கணவரின் உறவுகள் முன்னிலையில் தனது கணவர் மது போதையில் தன்னை தாக்கியதாகவும், கனடா செல்வதற்கு விமான டிக்கெட் தேதியில் கட்டுநாயக்க செல்லவிருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்த தம்பதியினர் தங்கள் மகளின் சடங்குகளை யாழில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பெரும் செலவில் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.

மறுநாள் வெளிநாட்டு மதுபான விருந்து மற்றும் அன்றிரவு கணவரின் உறவினர் வீட்டில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றதை அடுத்து கணவன் மனைவியை தாக்கியதாக தெரியவருகிறது.

இதையடுத்து, மனைவியும், மகளும் கணவரை பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleமாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுவன்!! அதிர்ச்சி சம்பவம்!!
Next articleகொழும்பு அதிவேக வீதியில் தில்லாக பேருந்தை ஓட்டும் வீரப் பெண்! குவியும் வாழ்த்துக்கள்