கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் செவிப்பரையை கிழித்த யாழ் யுவதி !

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபரொருவரின் செவிப்பரை யாழ்ப்பாண யுவதியொருவரின் தாக்குதலால் கிழிந்துள்ளது.

யாழ்ப்பாணம் கசுரினா கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் கடனாடாவில் இருந்து நாடு திரும்பிய இவர், புத்தாண்டு தினத்தன்று நண்பர்கள் சிலருடன் கசூரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். தண்ணீரில் நின்று கொண்டிருந்த ஆங்கிலேய பெண்ணை போதையில் இருந்த ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், கனடா நாட்டவர் தண்ணீரில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

யுவதியின் அறையினால் காதுகுழல் உடைந்ததால் கனேடிய ஆடவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மறுபுறம் யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பொது இடத்தில் அத்துமீறி சென்ற நபரை பெண் ஒருவர் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleயாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
Next articleமுல்லைத்தீவில் இளைஞர் மீது கொலைவெறித்தாக்குதல் ; காப்பற்றிய இராணுவம் !