பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தந்தை மீது துப்பாக்கிச் சூடு

எம்பிலிபிட்டிய பனாமுர – ஓமல்பே பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமல்பே பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது குழந்தையை பாடசாலையில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதியில் மறைந்திருந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Previous articleயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரதமகுரு !
Next articleடுபாய் சந்தையில் இலங்கை இளநீருக்கு கிராக்கி – பல ஆயிரத்தை தாண்டும் விலை