வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞனிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் மதவாச்சி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Previous article42 புகையிரத சேவைகள் குறித்து தற்போது வெளியான அறிவிப்பு
Next articleஇன்றைய ராசி பலன்கள் 12.1.2023