பணத்திற்காக குழந்தையை கடத்திய பெண் கொழும்பில் திடீர் மரணம்

நீர்கொழும்பில் போதைப்பொருள் வியாபாரம் காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண் திடீரென சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன் கெகுனாவல தெரிவித்துள்ளார்.

சேதுவதி – வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 47 வயதுடைய சமிலா உதயங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் ஹெரோயின் போதைப் பொருளை பெற்றுக்கொண்ட நபர், பணம் செலுத்தாத காரணத்தினால் கடந்த 6 ஆம் திகதி கிராண்ட்பாஸ் ரந்திய உயன பிரதேசத்தின் வீட்டுத் தொகுதியில் 10 வயதுடைய பேரனை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்தார்.

இதனையடுத்து, கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சுகவீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleமது போதையில் பாடசாலை அதிபரை தடியினால் தாக்கிய மாணவன் கைது : வவுனியாவில் சம்பவம்
Next articleஇலங்கை தொடர்பில் கவலையளிக்கும் தகவலை வெளியிட்ட உலக வங்கி