புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous articleயாழில் 111 பேருக்கு சிவப்பு அறிவித்தல்- சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை
Next articleஅரசாங்கத்தின் தீர்மானம்! மருத்துவதுறையில் ஏற்பட்டுள்ள ஆபத்து