அரசாங்கத்தின் தீர்மானம்! மருத்துவதுறையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

வெளிநாட்டில் நிபுணத்துவ பயிற்சி பெற்று வரும் சுமார் 700 வெளிநாட்டு வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வராத அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 500 இளம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக டாக்டர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார்.

நிலையான அரசாங்கக் கொள்கையின்மை மற்றும் வெளிநாடுகளில் இந்த வைத்தியர்களுக்கான அதிக தேவையினால் ஏற்பட்ட விரக்தியே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்களின் சேவைக் காலம் 60 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசாங்கக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமே வைத்தியர்கள் இந்த முடிவை எடுக்க முக்கியக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleபுலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Next article4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு