4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 4 உணவு பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது.

அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் கோதுமை மா விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகுமென லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous articleஅரசாங்கத்தின் தீர்மானம்! மருத்துவதுறையில் ஏற்பட்டுள்ள ஆபத்து
Next articleயாழில் களமிறங்கும் பிள்ளையான் அணி