யாழில் களமிறங்கும் பிள்ளையான் அணி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யாழ்.மாவட்டத்தின் சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யவோ அல்லது பிணைப்பணத்தை செலுத்தவோ பிள்ளையான் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனது கட்சியும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள சில சபைகளில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

Previous article4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Next articleயாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்