யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ் மாவட்ட செயலகத்திற்கு எழுத்தம் மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் கடமையை மேலதிக அரசாங்க அதிபராக இருந்த பிரதீபனிடம் வழங்கிச் சென்றுள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுவரை எவரும் நியமிக்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலமை காணப்படுகிறது.

இந்நிலையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய பிரதீபனை பதில் அரசாங்க அதிபராக நீடித்து பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் களமிறங்கும் பிள்ளையான் அணி
Next articleயாழில் சமூக வலைத்தளத்திற்கு செல்லாதே என கணவன் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய இளம் பெண்!