யாழில் சமூக வலைத்தளத்திற்கு செல்லாதே என கணவன் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய இளம் பெண்!

யாழில் கணவன் கண்டித்ததால் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவமானது யாழ் கல்வியங்காடுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த யுவதி குறித்த பகுதியில் வாழும் யுவதி என தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

குறித்த பெண் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரது கணவர் பலமுறை எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த உறவில் ஏற்பட்ட மோதலே தற்கொலைக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleயாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்
Next articleயாழில் தாளி செய்து கொடுப்பதில் மோசடி செய்த ஒருவர் கைது !