யாழில் தாளி செய்து கொடுப்பதில் மோசடி செய்த ஒருவர் கைது !

யாழில் தங்கத்தில் தாளி செய்து கொடுப்பதற்கு பதிலாக பித்தாளையில் தாளி செய்து கொடுத்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது.

இச்சம்பவமானது காங்கேசன்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஐந்தரை பவுன் தாலி மற்றும் கொடியை தயாரித்ததற்காக சந்தேக நபரிடம் பணம் கொடுத்து தாலி மற்றும் கொடியை பெற்றனர்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் தாலி மற்றும் கொடி தங்கம் அல்ல, பித்தளை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், தலைமறைவான சந்தேக நபரை கங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மறுபுறம் யாளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மற்றும் கொடி தயாரித்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் சமூக வலைத்தளத்திற்கு செல்லாதே என கணவன் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய இளம் பெண்!
Next articleபோதைப்பொருள் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள் !