மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து !

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பனை மரத்தில் மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி அச்சாலனி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்ற பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை (ஜன. 13) அதிகாலை 5.30 மணியளவில் வேகத்தடையை உடைத்து வீதியிலிருந்த பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதேச தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் மாணவியின் தாக்குதலால் தலைதெறிக்க ஓட்டமெடுத்த மாணவர் !
Next articleயாழில் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கவுள்ள மைதானம் !