இந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் !

இந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் கைலாச நாட்டை அங்கீகரிப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் கடந்த ஜனவரி 11ஆம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுனைடெட் கைலாஷ் மற்றும் நெவார்க் சிட்டி, நியூ ஜெர்சி, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகியவை நெவார்க் சிட்டி ஹாலில் “இருதரப்பு நெறிமுறைகள் ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டன.

இந்த விழாவில் ஐநாவுக்கான கைலாஷ் நிரந்தர தூதர் விஜயபிரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டெஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், நியூஜெர்சியில் இருந்து கைலாச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் நெவார்க் நரம்பருடனான ஒப்பந்தத்தில் ஒரு பகுதி மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேலும், பேரிடர், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை பரஸ்பர உதவியோடு எதிர்கொள்ளவும், மக்கள் நலப் பிரச்னைகளான மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்றவற்றைக் கையாளவும் பரஸ்பர உதவி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.

நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும், நியூயார்க் பெருநகரப் பகுதிக்குள் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது.

கடந்த 2020 அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆக இருந்தது, இது நாட்டின் 66வது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.

நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும், மேலும் இது நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையம் அமெரிக்காவின் முதல் நகராட்சி வணிக விமான நிலையமாகும்.

இதற்கிடையில், பல பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவில் தேடப்படும் நபராக சாமியார் நித்யானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் 11 மாதங்களேயான குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தாயின் சகோதரர் !
Next articleஅமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் 15ஆம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்பு உறுதி !