அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் 15ஆம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்பு உறுதி !

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அளித்த ஒப்புதலின்படி, வீட்டு மின் அலகுக்கான நிலையான கட்டணமும் வரும் 15ம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 0-30 யூனிட்களுக்கான நிலையான கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 31-60 யூனிட்களுக்கான நிலையான கட்டணம் ரூ.240ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் !
Next articleயாழில் விரலில் உள்ள மோதிரத்தை விரலோடு வெட்டிச் சென்ற கொள்ளையரகள் !