யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டிய நபர் பின்னர் நடந்த சம்பவம் !

வீதியில் பயணித்த நபர் ஒருவரை மறித்து கழுத்தில் வாள்வெட்டு மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இருபாலை டச்சு வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்து அவரது கழுத்தில் வாள் வைத்து மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleநாளையதினம் மதுபானங்கள் விற்பனைக்கு தடை !
Next articleபிரான்சிலிருந்து வந்து இலங்கையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சுற்றுலா பயணி !