பிரான்சிலிருந்து வந்து இலங்கையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சுற்றுலா பயணி !

சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்திற்கு அருகில் வழுக்கி விழுந்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது அஹுங்கல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் குடியுரிமை பெற்ற 60 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நீச்சல் தடாகத்திற்கு அருகில் வழுக்கி விழுந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleயாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டிய நபர் பின்னர் நடந்த சம்பவம் !
Next articleயாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசுப்பேருந்து !