வெளிநாட்டில் படித்து வந்த இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி ! வெளியான காரணம் !

ஜப்பானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் பயிற்சி பெற்று வந்த 23 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் கிரான் சோ பகுதியில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் எனவும் ஜப்பான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleயாழில் பொங்கள் விழாவை சிறப்பிக்க வந்த ஜனாதிபதி ரணில் !
Next articleயாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நீர்தாகை பிரயோகம் !