யாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நீர்தாகை பிரயோகம் !

ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் எதிரொலியாக இந்த நீர் பாவனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வீணை. வருகையை கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டம் இன்று (15.01.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என சுட்டிக்காட்டி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று (13.01.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது மாணவர் ஒன்றியம் இந்த அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவெளிநாட்டில் படித்து வந்த இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி ! வெளியான காரணம் !
Next articleயாழில் பொலிஸாரின் கரங்களை பிடித்து கதறி அழும் தாய்மார்! பலரையும் கண்கலங்க வைத்த நிமிடங்கள் !