யாழில் பொலிஸாரின் கரங்களை பிடித்து கதறி அழும் தாய்மார்! பலரையும் கண்கலங்க வைத்த நிமிடங்கள் !

இன்று யாழில் பொலிஸாரின் கைகளைப் பிடித்து தாய்மார்கள் கதறி அழும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜனாதிபதி ரணிலின் வருகையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, ​​தாய்மார்கள் பொலிஸாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதது கமெராவில் பதிவாகியுள்ளது.

மேலும், வீதியை மறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிர்ப்புத் தெரிவித்த அம்மக்கள், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதுடன், வீதித் தடைகளையும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நீர்தாகை பிரயோகம் !
Next articleயாழில் உரிமையாளர் இன்றி தனித்து நின்ற கே.டி.ம் பைக் பொலிஸாரல் மீட்பு !