யாழ். வானில் பறந்த பலவிதமான வண்ணங்களில் விசித்திரப் பட்டங்கள்!

யாழ்.வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் தினமான நேற்று பாரம்பரிய பட்டத்திருவிழா நேற்று உதயசூரியன் கடற்கரையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதை பறக்க விட்டனர். முதலாம் இடத்தை உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த ம.ஹாசன் என்பவரும் பெற்றுக்கொண்டார்.

இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 6 ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை உழவு இயந்திரம் மரநடுகை திட்டத்தை போன்று பட்டத்தை அமைத்த ம. பிரசாந் என்பவரும் மூன்றாம் இடத்தை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்கல அரங்கம் போன்று பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னா என்பவரும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சிறப்பு பரிசுகளுடன் பட்டப்போட்டியில் பங்கேற்ற அனைத்து பட்ட உரிமையாளர்களுக்கும் பரிசில் வழங்கப்பட்டது. பட்டத்திருவிழாவை காண பல ஆயிரக்கணக்கான மக்கள் உதயசூரியன் கடற்கரையில் கூடியிருந்தனர்.