யாழில் பிரபல சைவ உணவகத்தில் வடையில் காணப்பட்ட கரப்பான் பூச்சி!

கடந்த மாதம் 04.12.2022 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலின் கீழ் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றைய தினம் மற்றும் நாளை மறுதினம் யாழ்.பொதுச் சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசீலனை செய்யப்பட்டது.

இதன் போது பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. மேலும், மேற்படி உணவகத்தில் வடை தயாரித்து வழங்கும் சமையலறை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் காணப்பட்டன.

இதற்குப் பிறகு தனித்தனியாக உணவகம் மற்றும் சமையல் அறைக்கு எதிராக கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 06.12.2022 அன்று பொது சுகாதார ஆய்வாளர் பா.சஞ்சீவன் வழக்குப் பதிவு செய்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை முடியும் வரை உணவகம் மற்றும் சமையல் அறையை சீல் வைத்து மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous articleயாழில் அம்மன் ஆலயத்தில் இருந்த பாம்பை திருடிச் சென்ற மர்ம நபர் !
Next articleஅரச உத்தியோகஸ்தர்களுக்கான பொது விடுமுறைகள் குறித்து வெளியான அறிவிப்பு !