அரச உத்தியோகஸ்தர்களுக்கான பொது விடுமுறைகள் குறித்து வெளியான அறிவிப்பு !

நாட்டில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதேவேளை, பல்வேறு விசேட தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிக விடுமுறைகளை வழங்கும் நாடு இலங்கையாகும்.

இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொது விடுமுறை நாட்களை குறைத்து வேலை நாட்களை அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்மூலம் அரசு சேவை வினைத்திறனுடன் செயல்படுவதுடன், பொதுமக்கள் அரசு சேவையை தாமதமின்றி பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleயாழில் பிரபல சைவ உணவகத்தில் வடையில் காணப்பட்ட கரப்பான் பூச்சி!
Next articleரயிலில் மோதுண்டு 25 வயது மதிக்க தக்க இளைஞர் பலி!