ரயிலில் மோதுண்டு 25 வயது மதிக்க தக்க இளைஞர் பலி!

ரயிலில் மோதுண்டு 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று (15) இரவு 09 மணியலவில் ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்க பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் அடையாளம் தெரியாத நிலையில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஅரச உத்தியோகஸ்தர்களுக்கான பொது விடுமுறைகள் குறித்து வெளியான அறிவிப்பு !
Next articleகிளிநொச்சியில் ஏற்பட்ட கோர விபத்து!