வடக்கில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் !

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று கலென்பிந்துன்வெவ – அனுராதபுரம் பிரதான வீதியில் ஹிம்புதுகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி இன்று கஹட்கஸ்திகிலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous articleகிளிநொச்சியில் ஏற்பட்ட கோர விபத்து!
Next articleஇ.போ.ச பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி!