கொழும்பில் மீண்டும் சூடுபிடித்த ஆர்ப்பாட்டம் ! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் !

கொள்ளுப்பிட்டி சந்தியில், நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வாசித்தனர்.

இதன்போது, ​​ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை கற்களால் தாக்கியதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்தலை நோக்கி நகர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

கொழும்பு பௌடாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது காவல்துறை.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பௌடலோக மாவத்தையில் ஒன்று கூடியுள்ளனர்.

அவர்கள் அங்கு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவிருந்த நிலையில், அங்கு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை இரகசியமாக மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பௌதாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Previous articleயாழில் திடீரென அதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை ! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !
Next articleபொலிஸார் எனக்கூறி இளைஞனிடம் சஙகிளி பறித்துச்சென்ற கும்பல் !