லண்டனில் யாழ். குடும்பஸ்த்தரை மயக்கி 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை சுருட்டிய வவுனியா தேவகி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து லண்டனில் வசிக்கும் இளம் குடும்பஸ்த்தரிடம் இருந்து 15 ஆயிரம் பவுண்ஸ் பணத்தை வவுனியாவை சேர்ந்த தேவகி என்ற இளம் பெண் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் குறித்த குடும்பஸ்தரின் மனைவி சில ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

குறித்த யுவதி தனது காணொளிகளை ரிக்ரோக்கில் பதிவிட்டு வருவதாகவும் இதன் மூலம் கணவருடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரியாமல் அவரைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

லண்டனில் சிறிய கடை வைத்துள்ள தனது கணவரின் சமீபகால நடத்தை வித்தியாசமாக இருப்பதாகவும், கடையின் வருமானத்தை விட செலவுகள் அதிகரித்து வருவதால் இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் மனைவி கூறினார்.

மேலும் அவர் சந்தேகமடைந்து அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை சோதித்ததில் குறித்த பெண்ணின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் ஊடாக 15 ஆயிரம் பவுண்களுக்கு மேல் பணம் வவுனியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கணவரிடம் இதுபற்றி கேட்ட போது அவர் தன்னை தாக்க முயன்றதாகவும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் மனைவி கூறியுள்ளார்.

தானும் இரண்டு குழந்தைகளும் இப்போது தேவகியால் பிரிந்து விட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் வவுனியாவில் உள்ள உறவினர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடந்த மாத தொடக்கத்தில் தனது கணவர் சிங்கப்பூரில் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப் போவதாகக் கூறி அங்கு சென்றிருந்ததால், அந்தப் பெண் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக சந்தேகித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.

976510830வி எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய நெலுக்குளம் வீதி தேக்கவத்தை எனும் அடையாள அட்டையில் உள்ளவாறான முகவரி கொண்ட தேவகி சண்முகம் என்ற பெயருக்கே கணவர் பணம் அனுப்பியதாகவும் அந்த பெண்ணின் வட்சப் இலக்கத்தில் இருந்த புகைப்படமே மனைவியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.