யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர் !

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சமபவமானது யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பட்டா வாகனமும் துவிச்சக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளையும் காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 17/01/2023
Next articleயாழில் யுவதியை அநாகரிகமாக திட்டிய இ.போ.ச. பேருந்து சாரதி!