காணியில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவுடன் காத உறவு வைத்த இளைஞன் கைது !

காணியில் கட்டப்பட்டிருந்த பசுவுடன் உடலுறவு கொண்ட 19 வயது இளைஞர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞரை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதி நீதவான் மகேஷ் ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டம் வீரகுல காணியில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவுடன் பாலுறவு வைத்திருந்ததாக முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞன் வீரகுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த காணி உரிமையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேக நபரை ராகம போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தி ஜனவரி 23ஆம் திகதி மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Previous articleயாழில் யுவதியை அநாகரிகமாக திட்டிய இ.போ.ச. பேருந்து சாரதி!
Next articleமின் கட்டண திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!