இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தப்படும்!

இலங்கையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது நாட்டிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விநியோகம் செய்யும் போது QR முறைமையை பின்பற்றுவதில்லை.

QR மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதிலான நடைமுறையை மறு ஆய்வு செய்வதற்க்கான கூட்டம் நேற்றைய தினம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு ஆகியவற்றுடன் நடாத்தப்பட்டது. இதில் QR முறைமையை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளாத பெற்றோல் நிறுவனங்களின் உரிமங்களை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது!

Previous articleமின் கட்டண திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!
Next articleபொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்!