வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து !

வவுனியாவில் சற்றுமுன் வேக்கட்டுபாட்டை இழந்து லொறி ஒன்று உழவு இயந்திரங்களில் மோதி கோவிபத்து நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது வவுனியா மாவட்டம் – கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் லொறியை வேகமாக ஓட்டிச் சென்ற சாரதி அயர்வு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது மோதியுள்ளார்.

அருகில் இருந்த நபரை தாக்கிய நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டிரைவரை தாக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சாரதியையும், சாரதியுடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்தனர்.

Previous articleஇலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்தியா !
Next articleயாழில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்து வெளியான தகவல் ! அதிர்ச்சியடைந்த பொலிஸார் !