யாழில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்து வெளியான தகவல் ! அதிர்ச்சியடைந்த பொலிஸார் !

யாழ். இருபாலை பிரதேசத்தில், வாள்முனையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அச்சுவேலி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 14 ஆம் திகதி உரிமையாளர் இன்றி காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் அச்சுவேலி பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த 13ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என கண்டறியப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை கடத்திய கும்பல் தொடர்பில், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்களா? என அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleவவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து !
Next articleஇந்த ஆண்டு 500,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு!