மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்!!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா இன்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நாளை (18) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் அவர்கள் ஓய்வு பெற்றுச்சென்றதனைத் தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடித்தக்கது.

Previous articleயாழ். கிளிநொச்சி பெண்கள் பணத்திற்காக ஓமானில் விற்பனை! தப்பி வந்த பெண் அதிர்ச்சித் தகவல்!!
Next articleபடப்பிடிப்பின்போது இடம்பெற்ற விபத்தில் பற்கள் உடைந்து, முகம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் விஜய் ஆண்டனி வைத்தியசாலையில் அனுமதி !