படப்பிடிப்பின்போது இடம்பெற்ற விபத்தில் பற்கள் உடைந்து, முகம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் விஜய் ஆண்டனி வைத்தியசாலையில் அனுமதி !

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பானது முடிகின்ற கட்டத்தில் இருக்கும் தருவாயில் பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சிக்காக விஜய் ஆண்டன் மலேசியாவில் உள்ள நிலையில் இடம்பெற்ற விபத்தில் விஜய் ஆண்டனி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சிம்சி போன்ற சாதனங்கள் வைத்து தனி ஒருபோட்டில் வைத்து படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதன்முன் விஜய்ஆண்டனி ஸ்ட்ரீமர் போட்டை தனியாக ஓட்டி வருவது போல் படமாக்கபடவிருந்தது.

இதனையடுத்து போட்டை ஓட்டிவரும் போது விஜய் ஆண்டனி நிறுத்த முடியாமல் எதிர்பக்கம் உள்ள படகுழுவினருடன் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் தண்ணீரில் விழுந்த விஜய் ஆண்டனி நீச்சல் தெரியாததால் மூழ்கியதையடுத்து மிகுந்த தேடுதலுக்கு பின் அவரின் உடல் மிதந்துள்ளது.

மேலும் அவரின் முகம் சேதமடைந்ததையடுத்து அவரின் பற்கள் சிதறிய நிலையில் அவசர அவசரமாக படக்குழுவினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டு செல்லவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்!!
Next articleஇன்றைய ராசிபலன் 18/01/2023